"ராவண தேசம்".. "ராமன் நல்லவன் கிடையாது.. கெட்டவன்".. லீக்கான பேராசிரியை ஆடியோ.. பாய்ந்த ஆக்‌ஷன்

ராமனை விமர்சித்த பஞ்சாப் மாநில பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன் என்று வகுப்பில் பாடம் நடத்திய பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளது பல்கலைக்கழகம்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருபவர் குர்சங் ப்ரீத் கௌர்.

இவர் சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தபோது, ராமர் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்..

பேராசிரியை

பேராசிரியை

அந்த ஆடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.. அந்த ஆடியோவில், "மனதளவில் ராவணன் நல்லவன்... ஆனால், ராமன் நல்லவன் கிடையாது.. ராமனை ஒரு தந்திரக்காரனாக நான் பார்க்கிறேன்... ராமன், சீதையை ராணுவனனிடம் சிக்கவைக்க திட்டம் தீட்டி, கடைசியில் சீதையை சிக்கவைத்துவிட்டு, எல்லா பழியையும் ராவணன் மீது போட்டுவிட்டான்...

 ராவணன் நல்லவன்

ராவணன் நல்லவன்

இதில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்று நாம் எப்படி முடிவு செய்ய முடியும்? ஆனால், இன்று உலகமே ராமனை தொழுதுவிட்டு, ராவணனை கெட்டவன் என்று சொல்கிறது.. ஒட்டுமொத்த உலகமும் ராமரை வழிபடுகிறது. ஆனால், ஒரு செயலை திட்டமிட்டு செய்த ராமன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்? ராமன் தந்திரமானவன்" என்று குர்சங் ப்ரீத் கௌர் அந்த ஆடியோவில் பேசியிருந்தார்... இதையடுத்து அந்த பேராசிரியை மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில் பல்கலைக்கழகம் பேராசிரியையை பணியை விட்டு நீக்கியுள்ளது.

மதங்கள்

மதங்கள்

இது தொடர்பாக, பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், "இந்த சம்பவம் பலரையும் காயப்படுத்தியுள்ளது என்பதை உணர்கிறோம்... பேராசிரியை குர்சங் கௌர் பேசியுள்ளது, அவரது தனிப்பட்ட கருத்தாகும்... பல்கலைக்கழக விதியை மீறி பேசியதற்காக அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளோம்... இந்த சம்பவத்திற்காக பெரிதும் வருந்துகிறோம்... இந்த நிறுவனம் அனைத்து மதங்களையும் நம்பிக்கையையும் அன்புடன் மதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 ராவணன் ஆதரவு

ராவணன் ஆதரவு

அதேபோல, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக் குமார் மிட்டல், நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.. ஆனால், பேராசிரியை குர்சங் கௌர், இதை பற்றி எதுவுமே பேசவில்லை.. விளக்கமும் தரப்படவில்லை... ஆனால், ராவணனை ஆதரித்ததால், சோஷியல் மீடியாவில் தனக்கு பெருமளவில் கண்டனங்கள் எழுந்ததால், தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தை முடக்கிவைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+