ஜன் தன் வங்கிக்கணக்கில் இருந்து மாதம் ரூ. 10000 மட்டுமே எடுக்க முடியும் - ரிசர்வ் வங்கி #10000
ஜன் தன் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் இருந்து மாதம் ரூபாய் 10000 மட்டுமே எடுக்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
டெல்லி: நாட்டில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்து இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. கணக்கில் காட்டாத பணத்தை வைத்திருப்பவர்கள் தங்களது பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ள ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வருவதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் வங்கியில் இருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமானால் வங்கி மேலாளரின் அனுமதி பெற வேண்டும். கேஒய்சி (kyc) விபரம் தராதவர்கள் ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும். கறுப்பு பணம், ஜன்தன் கணக்கு மூலம் வெள்ளையாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நவம்பர் 8 ம் தேதி அறிவித்தார். அதன் பிறகு பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்பட்டது. பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பிறகு ஏழைகளுக்கான ஜன் தன் வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.64 ஆயிரத்து 252 கோடி டெபாசிட் குவிந்திருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில்தான் அதிகபட்சமாக ஜன் தன் கணக்குகளில் ரூ.10 ஆயிரத்து 670 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு பணம் பதுக்கிய பலர் ஏழைகளின் ஜன் தன் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இதற்கும் செக் வைத்துள்ளது மத்திய அரசு. ஜன் தன் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள், அந்த பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நவம்பர் 9ஆம் தேதிக்குப் பின்னர் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து மாதம் ரூபாய் 10000 எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு காரணமாக தங்களின் கறுப்பு பணத்தை பிறரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஜூன் மாதம் பொறந்தாச்சு.. ஆர்பிஐ சொல்லப்போகும் முடிவு.. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் உஷார்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications