ஆந்திரா டூ பர்மா பார்டர் வழியாக சீனா போகும் செம்மரக் கடத்தலின் பாதை
திருப்பதி: 12 தமிழர் உட்பட 20 அப்பாவி தொழிலாளர்களின் உயிரை காவு வாங்கியிருக்கும் 'செம்மரக் கடத்தல்' தொழிலின் பிரதான மையமாக விளங்குவது மணிப்பூர் மாநிலம் தான்..
ஆந்திராவின் சேசாலம் வனப்பகுதியில் உலகிலேயே தரம் வாய்ந்த செம்மரங்கள் உள்ளன. இந்த சேசாலம் வனப்பகுதிதான் செம்மரக் கடத்தல் கும்பலின் பிரதான இலக்கு.
செம்மரக் கடத்தலில் சீனா மாபியாக்களே அதிகம் என்கிறது உளவுத் துறை. 2013 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல்களை வைத்திருந்ததாக 55 சீனா நாட்டவரை இந்திய போலீசார் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரங்கள் டெல்லி மற்றும் மும்பைக்கு தரை வழியே கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 2013ஆம் ஆண்டு மொத்தம் 30 ஆயிரம் கிலோ செம்மரங்கள் டெல்லி, மும்பை விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 18 ஆயிரம் கிலோ செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மணிப்பூர் மாநிலமும் செம்மரக் கடத்தலில் முக்கிய இடம் வகிக்கிறது.
ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரங்கள் மணிப்பூர் மாநிலம் கொண்டு செல்லப்படுகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து பர்மா செல்கிற இம்பால்- மோரே பாதைதான் செம்மரக் கடத்தலின் பிரதான பாதையாகவும் இருக்கிறது.
இந்த பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு வெட்டிக் கடத்தப்படும் செம்மரங்களை பறிமுதல் செய்வதும் பிரதான பணியாகஇருக்கிறது. ஒருவழியாக தப்பித்து மோரேவுக்குள் வந்துவிடும் செம்மரங்கள் பர்மா கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு கடத்தப்படுகிறது.
இந்த பாதையில் எளிதாக தங்களுக்கு செம்மரங்கள் கிடைத்தும் என்பது சீனா மாபியாக்களின் எதிர்பார்ப்பு... தென்கிழக்காசியாவில் நுழைவாயிலாக கருதப்படும் மோரே நகரம்... செம்மரக் கடத்தல் மையம் என்கிற கரும்புள்ளியுடனும் இருந்தும் வருகிறது என்பது கசப்பான உண்மை..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications