பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு கட்டணம் 1 ரூபாய்...ஜார்கண்ட் முதல்வர் அதிரடி!
பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் பத்திரப்பதிவு கட்டணம் 1 ரூபாய் மட்டுமே என்று ஜார்கண்ட் மாநில முதல்வர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்ய கட்டணமாக 1 ருபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரகுபர்தாஸ் அறிவித்துள்ளார்.இது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வராகப் பதவியேற்றது முதல் அரசு அலுவலகங்களில் பான் மசாலா தடை, ஊழியர்களின் நேர ஒழுங்கு , பெண்களுக்கு பாலியல் சீண்டல் தருவோரைக் கண்காணிக்க சிறப்பு குழு, பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர ஆம்புலன்ஸ் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நாடுமுழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் மிஞ்சும் வகையில் பாஜகவை சேர்ந்த ஜார்கண்ட் முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளதை மகளிர் அமைப்புகள் வரவேற்றுள்ளனர்.
ஜார்கண்ட் மாநில அரசின் செய்திக்குறிப்பில்," பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு கட்டணம் ரூ.1 மட்டுமே ஆகும். தற்போது சொத்து பதிவு செய்வதற்கு 7 சதவீத பத்திரப்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது.இந்த அறிவிப்பின் மூலமாக பெண்களின் வளர்ச்சி மேம்படுவதோடு, அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கும். விரைவில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications