வேலைக்கார சிறுமியை நிற்க வைத்து விட்டு தான் மட்டும் சாப்பிட்ட ரேணுகா சவுத்ரி!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுதிரி தனது குடும்பத்துடன் ஹோட்டலில் சாப்பிட்டது ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் என்ன சர்ச்சை...?. ரேணுகா சவுத்ரி வீட்டு வேலைக்கார சிறுமியை ஓரமாக நிற்க வைத்து விட்டு சவுத்ரி குடும்பத்தினர் மட்டும் சாப்பிட்டதுதான் சர்ச்சைக்குக் காரணம்.
இப்போதெல்லாம் சரச்சைகள் எப்படி வரும் என்பதை யாராலுமே ஊகிக்க முடிவதில்லை. தெரிந்தோ, தெரியாமலோ பல பிரபலங்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரேணுகா சவுத்ரி தனது குடும்பத்தினருடன் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயுள்ளார். அவர்களுடன் அவர்கள் வீட்டு வேலைக்காரச் சிறுமியும் உடன் போயுள்ளார். அங்கு ரேணுகா குடும்பத்தினர் உட்கார்ந்து ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் வேலைக்காரச் சிறுமி, ரேணுகா அருகிலேயே நின்றபடி இருந்துள்ளார். அவர் சாப்பிட்டது போலத் தெரியவில்லை.
இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. வேலைக்காரச் சிறுமியை பார்க்க வைத்து விட்டு ரேணுகா குடும்பத்தினர் மட்டும் சாப்பிட்டது என்ன வகையான நாகரீகம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரேணுகா சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications