கர்நாடகாவில் கெமிஸ்ட்ரி வினாத்தாள் லீக் ஆனதற்கு பழிவாங்குதல் தான் காரணமா?
பெங்களூர்: கர்நாடக மாநில பி.யூ கல்வி ஆணையத்தின் தலைவி பல்லவி ஆக்ருதியை பழிவாங்க பிளஸ் டூ வேதியியல் வினாத்தாளை சிலர் கசியவிட்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வுகள் நடந்து வருகிறது. கடந்த 21ம் தேதி மாணவ, மாணவியர் வேதியியல் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் ஏற்கனவே கசிந்த விபரம் தெரிய வந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேதியியல் தேர்வு மார்ச் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வினாத்தாள் மீண்டும் கசிந்ததால் தேர்வு ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 10 நாட்களில் 2வது முறையாக வினாத்தாள் கசிந்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பி.யூ. கல்வி ஆணையத்தின் தலைவியான பல்லவி ஆக்ருதி ஆணையத்தில் களையெடுக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் பல அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்துள்ளார். இது குறித்து மாநில அரசிடம் அவர் ரகசியமாக அறிக்கையும் சமர்பித்துள்ளார். ஆனால் அவர் அளித்த அறிக்கையில் இருந்த அதிகாரிகளின் பெயர்கள் எப்படியோ கசிந்துவிட்டது.
இதனால் கடுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்லவியை பழிவாங்க முடிவு செய்து வினாத்தாளை கசிய விட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வினாத்தாளை கசிய விட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications