Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் அமைதிக்காக கடைசி வரை எழுதிய பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை.. யார் சுஜாத் புகாரி?

காஷ்மீரில் சுடப்பட்ட ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர், சுஜாத் புகாரி கடைசி நொடி வரை அம்மாநில மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜம்மு - காஷ்மீர் பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி கொலை- வீடியோ

    ஸ்ரீநகர்: காஷ்மீரில் சுடப்பட்ட ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர், சுஜாத் புகாரி கடைசி நொடி வரை அம்மாநில மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அவரின் மரணம் பத்திரிக்கை துறைக்கும் அம்மாநில மக்களுக்கு பெரிய இழப்பாகும்.

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வந்த சுஜாத் புகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அலுவலகம் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது சுடப்பட்டு .

    நேற்று மாலை புகாரியை மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் புகாரி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

    யார் இவர்

    யார் இவர்

    சுஜாத் புகாரி, காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த புகாரி அந்த மாநிலத்தில் ரைசிங் காஷ்மீர் என்ற பிரபல பத்திரிக்கையை நடத்தி வந்தார். முதலில் இவர் தி இந்து பத்திரிக்கையில் 15 வருடமாக வேலை பார்த்தார். அதன்பின் சொந்தமாக காஷ்மீர் குறித்து மட்டும் எழுதுவதற்காக ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆனார். அப்போதிலிருந்து காஷ்மீர் குறித்து தீவிரமாக எழுதினார்.

    உலகம் முழுக்க

    உலகம் முழுக்க

    உலகின் அமைதிக்காக செயல்படும் பல்வேறு இயக்கங்கள், குழுக்களில் இவரும் செயல்பட்டார். இவருக்கு காஷ்மீர் விடுதலையை விட, தீவிரவாத தாக்குதலை விட, அரச பயங்கர வாதத்தை விட ஒரு விஷயம் மட்டுமே குறிக்கோளாக இருந்து வந்தது. கடைசி நாள் வரை அமைதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எழுதி வந்தார். எல்லா பிரச்சனைகளுக்கும் இடையில் அமைதி குறித்து எழுதினார். ஐநாவில் கூட அமைதி குறித்து பேசினார்.

    கடிவாளம்

    கடிவாளம்

    இவரது பத்திரிக்கை உலகம் முழுக்க பெயர் பெற்றது. இதனால் அரசு இவரின் செயல்படுகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. சில சமயங்களில், அரசு இவரின் பத்திரிக்கையை சென்சார் செய்து வெளியிட்டது. சில சமயங்களில் பத்திரிக்கையே வெளி வரமுடியாமல் போனது. அந்த அளவிற்கு இவரின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியது.

    அரசு போராளி

    அரசு போராளி

    இவரது பத்திரிக்கை உலகம் முழுக்க பெயர் பெற்றது. இதனால் அரசு இவரின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. சில சமயங்களில், அரசு இவரின் பத்திரிக்கையை சென்சார் செய்து வெளியிட்டது. சில சமயங்களில் பத்திரிக்கையே வெளி வரமுடியாமல் போனது. அந்த அளவிற்கு இவரின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இவர் இந்தியாவை எவ்வளவு தனது எழுத்துக்களில் தாக்கினாரோ அதே அளவு பாகிஸ்தானையும் தாக்கி எழுதி இருக்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் ஒரே விஷயத்தைதான் செய்கிறது என்று எழுதியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு மட்டும் காஷ்மீர் மக்கள் இந்தியாவின் கண்களுக்கு எப்படி தென்படுகிறார்கள் என்று இவர் வெளிப்படையாக் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்.

    என்ன ஒரு பேச்சு

    என்ன ஒரு பேச்சு

    இவர் இந்தியாவை எவ்வளவு தனது எழுத்துக்களில் தாக்கினாரோ அதே அளவு பாகிஸ்தானையும் தாக்கி எழுதி இருக்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் ஒரே விஷயத்தைதான் செய்கிறது என்று எழுதியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பு மட்டும் காஷ்மீர் மக்கள் இந்தியாவின் கண்களுக்கு எப்படி தென்படுகிறார்கள் என்று இவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்.

    எல்லா இடங்களிலும்

    எல்லா இடங்களிலும்

    அதேபோல் இவர் மக்களுடன் இணைந்து செய்தி சேகரித்தார். காஷ்மீரில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் களத்தில் சென்று இவர் தொகுத்து தந்துள்ளார். களத்தில் இறங்கி, தெருத்தெருவாக் சுற்றி, மக்களிடம் பேசி இவர் தகவல்களை சேகரித்துள்ளார். இவர் கடைசி வரை மக்களின் குரலாகவே இருந்துள்ளார்.

    மூன்று முறை முயற்சி

    மூன்று முறை முயற்சி

    இவரை மூன்று முறை கொல்ல திட்டமிட்டுள்ளார். 2000த்தில் இவர் மோசமாக தாக்கப்பட்டார்.அதன்பின்பே இவருக்கு இரண்டு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் எல்லாவற்றையும் மீறி நேற்று இவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மூன்று பேர் சேர்ந்து இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    கடைசியில்

    இவரை மூன்று முறை கொல்ல திட்டமிட்டுள்ளனர். 2000த்தில் இவர் மோசமாக தாக்கப்பட்டார்.அதன்பின்பே இவருக்கு இரண்டு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் எல்லாவற்றையும் மீறி நேற்று இவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மூன்று பேர் சேர்ந்து இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+