தொடரும் ஐ.டி.ரெய்டு.. மும்பை ஏர்போர்ட்டில் பயணியிடம் ரூ.28 லட்சம் புதிய 2000 நோட்டுகள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் புதிய 2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை: மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்திலிருந்த அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு அமலுக்கு வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து கருப்பு பணம் பதுக்கியவர்கள் வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணியிடம் ரூ28 மதிப்புள்ள புதிய 2000 நோட்டுகள் இருப்பதாக வருமான வரித்துறைக்கும் அமலாக்க பிரிவுக்கும் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மும்பை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற வருமான வரித்துறையினர், மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு துபாய் விமானத்திற்காக காத்து இருந்த பயணியிடம் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பயணி ஒருவரிடம் இருந்து ரூ.28 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அவரிடம் பாதுகாப்புதுறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் அவருடையது தானே அல்லது வேறு யாரிடமாவது கொடுப்பதற்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications