காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குற்றம்சாட்டவில்லை: ராகுல் விளக்கம்
டெல்லி: மகாத்மா காந்தி படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவமதிக்கும் வகையில் பேசவில்லை என உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர் காந்தியின் கொலைக்குப் பொறுப்பு என்றுதான் கூறியதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள சோனாலி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் 'மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான்' என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்காவிட்டால் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று கூறியது.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ராகுல் தரப்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினார். அவர், தனது வாதத்தில், மகாத்மா காந்தி கொலையை, ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசவில்லை என குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications