இந்துத்துவா குறித்த மோகன் பகவத்தின் கருத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்
டெல்லி: இந்துத்துவாதான் வாழ்க்கை முறை.. இந்தியர்களை ஒருங்கிணைக்கக் கூடியது.. இந்தியாவில் வாழ்பவர்களை இந்துக்கள் என்று ஏன் அழைப்பதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகதவ் பேசியதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒடிஷாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத், ஜெர்மனியில் வாழ்வோரை ஜெர்மானியர்கள் என்று அழைக்கிறார்கள்.. இங்கிலாந்தில் வாழ்வோரை இங்கிலாந்து நாட்டவர் என்று அழைக்கும் போது இந்துஸ்தானத்தில் வாழ்பவர்களை இந்துக்கள் என்று அழைப்பதில்லையே என்று கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் இந்திய அரசியல் சாசனத்தை முதலில் படிக்க வேண்டும். இந்தியா என்பது பல கலாசாரங்களைக் கொண்ட நாடு. இந்தியா அல்லது பாரத் என்றுதான் அரசியல் சாசனம் இந்த நாட்டை குறிப்பிடுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவும், இந்தியா ஒன்றும் இந்துத்துவா கருத்தியலை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படியான கருத்துகள் மக்களை பிளவுபடுத்தவே செய்யும். இத்தகைய கருத்துகளைப் பரப்புவதை ஆர்.எஸ்.எஸ். கைவிட வேண்டும். நாட்டின் அரசியல் சாசனத்தையும் வரலாறையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். தாங்கள் நினைக்கிற வரலாற்றையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எழுதிவிட முடியாது என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications