கர்நாடக கடற்கரையில் நிர்வாணமாக சுற்றிய ரஷ்ய கடற்படை வீரர்கள்
கார்வார்: ரஷ்ய கடற்படை வீரர்கள் கர்நாடக மாநில கடற்கரையில் நிர்வாணமாக திரிந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய கடற்படைக்கு ரஷ்யா ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற போர்க்கப்பலை கட்டித் தந்துள்ளது. இந்த கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள ஐஎன்எஸ் கதம்பா கடற்படை தளத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த கப்பலை பயன்படுத்துவது குறித்து இந்திய கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 120 ரஷ்ய கடற்படை வீரர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ரஷ்ய வீரர்களில் சிலர் பொது இடங்களில் மது அருந்தினர். இதை பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் எதற்காக புகைப்படம் எடுக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் அவர்களுக்கு வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் நேற்று சுமார் 50 ரஷ்ய வீரர்கள் கார்வார் கடற்கரை அருகே நிர்வாணமாக நீந்தினர். இதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாமல் நெளிந்தனர். இதையடுத்து போலீசார் வந்து கர்நாடக கடற்கரைகளில் நிர்வாணமாக சுற்றக் கூடாது என்று தெரிவித்த பிறகு வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.
ரஷ்ய வீரர்கள் ஆடையின்றி சுற்றியது உள்ளூர் மக்களை கோபமடைய வைத்தது. அவர்களை குறை கூறி பயனில்லை. அவர்களுக்கு இந்திய கலாச்சாரம் பற்றி கற்றுக் கொடுக்காத இந்திய கடற்படை ஊழியர்களைத் தான் குற்றம் கூற வேண்டும் என்று உள்ளூர்வாசியான பிரேம் நாயக் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications