காத்திருக்கச் சொன்னது குத்தமா?.. சலூன் கடைக்காரரை சுட்டுக்கொன்ற இளைஞர்
புலந்த்சாகர் : உத்தரபிரதேசத்தில் ஷேவிங் செய்துகொள்ள வந்தவரை சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னதால், அந்த இளைஞர் சலூன் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார்.
உத்தர பிரதேசத்தில் மாநிலம் தாகர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாருக். இவர் அதே கிராமத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சலீம் என்ற இளைஞர் ஷாருக் கடைக்கு வந்தார்.

அப்போது கடையில் சிலபேர் இருந்தார்கள். சலீம் வந்தவுடன் தனக்கு முதலில் ஷேவிங் செய்ய கேட்டுக்கொண்டார். ஆனால் ஷாருக், ஏற்கனவே ஆள் இருப்பதால் அவர்களுக்குப்பின் ஷேவிங் செய்கிறேன் என்றார்.
காத்திருக்கச் சொன்னதையடுத்து, கோபம் அடைந்த சலீம், தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சலூன் கடைக்காரரை சுட்டார். துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த ஷாருக் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே ஷாருக் உயிரிழந்தார்.
ஷாரூக்கின் தந்தை கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமின் நண்பர்கள் இருவரை கைது செய்துள்ளனர். ஆனால் சலீம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஷேவிங் செய்வதற்கு சற்று நேரம் காத்திருக்க முடியாமல் சலூன் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications