எங்களை விட்டு ஏன் தாத்தா போனீங்க.. காந்தி சிலை முன்பு குமுறிக் குமுறி அழுத சமாஜ்வாடி தலைவர்!
Recommended Video
லக்னோ: எங்களை விட்டு எங்கே போனீர்கள் என கேட்டு காந்தி சமாதியில் சமாஜ்வாதி தலைவர் ஃபெரோஸ் கான் குலுங்கி குலுங்கி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் அமைதி பேரணி, அஞ்சலி செலுத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் காந்தியின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
உத்தரப்பிரதேசத்தில் சம்பல் நகரில் சந்தௌசி கோட்வாலி பகுதியில் பஃவாரா சவுக்கில் உள்ள காந்தி சிலை முன்பு சமாஜ்வாதி கட்சியினர் திரண்டனர். அப்போது காந்தி சிலைக்கு அக்கட்சியின் தலைவர் பெஃரோஸ் கான் மரியாதை செலுத்தினார்.

ஃபெரோஸ் கான்
அப்போது அவரை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை அறிந்த ஃபெரோஸ் கான் காந்தியின் சிலைக்கு முன்பு விழுந்து வணங்கி குலுங்கி குலுங்கி அழுதார். மேலும் எங்களை விட்டு எங்கே சென்றீர்கள். பெரிய நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்து விட்டு எங்களை தனியாக விட்டுவிட்டீர்களே.

ஆதரவாளர்கள்
எங்களது ஆசைகள் மெல்ல மெல்ல நிராசையாகிறது என கூறினார். பின்னர் கீழே குனிந்து கண்களை துடைத்தார். ஆனால் அவரது கண்ணீரை யாராலும் வீடியோவாக எடுக்க முடியவில்லை. எனினும் அவரது ஆதரவாளர்கள் அவரை தேற்ற முயற்சித்தனர்.

வைரல்
அப்போது அவரது உதவியாளரும் காந்தி காந்தி என அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஃபெரோஸ் கானை ட்ரோல் செய்து வருகின்றனர். எத்தனை பெரிய டிராமா என கிண்டல் செய்கின்றனர்.
|
நீலிக்கண்ணீர்
காந்தி ஜெயந்திக்கு மாலை அணிவித்தோமா, மரியாதை செலுத்தினோமா என இல்லாமல் இதென்ன கேமராவை பார்த்தவுடன் நீலிக் கண்ணீர் வடிப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர். தண்ணீரே வராமல் துடைத்தார் பாருங்க என்ற கமென்ட்களும் வருகின்றன. காந்தி பிறந்தநாளை நாடே கொண்டாடி வரும் நிலையில் ஃபெரோஸ் கானும் அவரது ஆதரவாளர்களும் அழுது கொண்டே கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications