பரோல் முடிந்தது: ‘தீபாவளி வாழ்த்துக்கள்’ கூறிவிட்டு மீண்டும் சிறை திரும்பிய சஞ்சய் தத்
மும்பை: மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளியே வந்திருந்த நடிகர் சஞ்சய் தத், பரோல் காலம் முடிந்து இன்று காலை புனேயில் உள்ள ஏரவாடா சிறைக்கு திரும்பினார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் நடிகர் சஞ்சய் தத். இந்நிலையில் காலில் வலி என மருத்துவக் காரணத்துக்காக பரோலில் வெளி வந்தார் சஞ்சய் தத்.
பரோல் காலம் நேற்றோடு முடிவடைந்ததால் இன்று காலை மீண்டும் எரவாடா சிறைக்குத் திரும்பினார் சஞ்சய்.

பரோல்...
இவர் தனது காலில் வலி எனக் கூறி கடந்த 1ம் தேதி பரவலில் வெளிவந்தார். உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வந்திருந்தார்.

நீட்டிப்பு...
14- ஆம் தேதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீட்டித்தார் சஞ்சய்.

சிறைக்குத் திரும்பினார்....
இந்நிலையில் நேற்றோடு பரோல் காலம் முடிந்ததால், இன்று காலை 6.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து சஞ்சய் தத் புறப்பட்டு மீண்டும் புனே சிறைக்குச் சென்றார்.

தீபாவளி வாழ்த்து...
வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத் கூறியதாவது, ‘இன்னும் கால்களில் வலி உள்ளது. முழுவதுமாக குணம்டையவில்லை. நான் விரைவில் விடுதலையாக பிரார்த்திக் கொள்ளுங்கள். அனைவரும் அளித்த ஆதரவுக்கு நன்றி. அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்' என்றார்.

சிறைதண்டனை....
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது. சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்.

மத்திய அரசின் கோரிக்கை....
இந்நிலையில், 5 ஆண்டு சிறைத் தண்டனையைக் குறைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு மகாராஷ்டிர மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications