சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது - மல்லிகார்ஜுன கார்கே
சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லி: சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுபோன்ற நபர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பது ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று அக்கட்சியின் எம்எல்ஏக்களால் சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் வரும் 9 ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவ்சமானது என தெரிவித்துள்ளார்.
சசிகலா போன்ற நபர் ஆட்சி பொறுப்பை ஏற்பது ஜனநாயகத்துக்கு ஏற்றது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுத்துவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications