ஜெ. அடித்ததாக டெல்லி போலீசில் சசிகலா புஷ்பா திடீர் புகார்!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாகவும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டுவதாகவும் டெல்லி போலீசில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா புகார் கூறியுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாகத் தாக்கினார் சசிகலா புஷ்பா. இது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புஷ்பாவிடம் ஜெயலலிதா விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, தம்மை ஜெயலலிதா அடித்தார்; எம்பி பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கிறார்; நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றெல்லாம் கதற நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் அவர் அதிரடியாக அதிமுகவில் இருந்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

சசிகலா புஷ்பா மீது புகார்
அத்துடன் தமக்கு பாதுகாப்பு கோரி டெல்லி நீதிமன்றத்திலும் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்தார். இதனிடையே தமிழகத்தில் சசிகலா புஷ்பா அடுத்தடுத்து புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

முன்ஜாமீன்
சென்னையில் உள்ள சசிகலா புஷ்பாவின் கணவர், கொலை மிரட்டல் புகாரில் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மீது டெல்லி போலீசில் சசிகலா புஷ்பா ஒரு புகார் கொடுத்துள்ளார்.
|
டெல்லி போலீஸில் புகார்
அதில், என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜெயலலிதா மிரட்டி வருகிறார். அவர் இது தொடர்பாக என்னை அடித்தார். எம்பி பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்வதாகவும் மிரட்டல் வருகிறது.

வாழ முடியாது...
எனக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட்டால் ஒருநிமிடம் கூட வாழமுடியாது. அதிமுகவினரால் நான் மிரட்டப்படலாம்... கொல்லப்படலாம் என சசிகலா புஷ்கா கூறியுள்ளார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications