வேறு கட்சியில் சேராதவரை சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் "கட்சி சாரா" எம்.பி.
டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா வேறு ஒரு கட்சியில் சேராதவரை ராஜ்யசபாவில் கட்சி சாராத எம்.பி.யாக செயல்பட முடியும் என்கிறது விதிகள்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 50 எம்.பி.க்களை கொண்டிருந்தது அதிமுக. லோக்சபாவில் 37; ராஜ்யசபாவில் 13 எம்.பிக்கள் இருந்தனர்.
தற்போது அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக ராஜ்யசபாவில் புகார் தெரிவித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அக்கட்சி எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் அதிமுகவின் பலம் 12 ஆக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் தாம் ஒரு போதும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இதனால் அவரது எம்.பி. பதவி என்னவாகும் என்ற கேள்விகுறி எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி கூறுகையில், சசிகலா புஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கட்சி சாரா எம்.பி.யாக ராஜ்யசபா தலைவர் அறிவிக்கலாம்.
வேறு ஒரு கட்சியில் அவர் சேர்ந்தால் மட்டுமே எம்.பி. பதவியை அவர் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications