வேலைக்கார பெண்களை பலாத்காரம் செய்த வழக்கு: சவுதி அதிகாரி இந்தியாவில் இருந்து எஸ்கேப்?
டெல்லி: வேலைக்கு அமர்த்தப்பட்ட இரு பெண்களை 4 மாதகாலமாக பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியுள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரி திடீரென தனது வீட்டை காலி செய்துவிட்டு, தாய் நாட்டுக்கே தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் தூதரகம் இந்திய தலைநகர் டெல்லியிலுள்ளது. இதில் பணியிலுள்ளார் செயலாளர் என்ற மட்டத்திலான ஒரு 'உயர் அதிகாரி'. இந்த அதிகாரியின் வீடு குர்கான் பகுதியிலுள்ளது.

செக்ஸ் அடிமைகள்
இந்த வீட்டில் வேலை செய்வதற்காக என்று, 4 மாதங்கள் முன்பு நேபாளத்தை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், பணிக்கு அமர்த்திய சில நாட்களிலேயே வேலைக்கு வந்த தாயையும், மகளையும், அந்த அதிகாரி செக்ஸ் அடிமைகளாக நடத்தியுள்ளார். சவுதியில் இருந்து டெல்லி வரும் அவரது நண்பர்கள் பலருக்கும் அந்த இரு பெண்களையும் விருந்தாக்கியுள்ளார்.

மீட்பு
என்.ஜி.ஓ தகவல் அடிப்படையில் டெல்லி போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தி இரு பெண்களையும் மீட்டுள்ளனர். போலீசில் பெண்கள் அளித்த வாக்குமூலத்தில், சவுதி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தூதரக மட்டத்திலான உறவு கெடும் என்பதால், குற்றவாளிகள் பெயர் விவரத்தை வெளியிட போலீசார் மறுத்து வருகிறார்கள்.

தஞ்சம்
இதனிடையே, குர்கான் வீட்டை காலி செய்துவிட்டு, டெல்லியிலுள்ள சவுதி தூதரகத்தில் அந்த அதிகாரி தஞ்சம் புகுந்துவிட்டதாக முதலில் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அவர் தனது மனைவியோடு, தாய்நாடான சவுதிக்கே தப்பி சென்றுவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி மறுப்பு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பச்சைக்கொடி காட்டினால்தான் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் போலீசாரால் எடுக்க முடியும். எனவே போலீசார் அமைதி காத்து வந்தனர். இந்த நேரத்தை பயன்படுத்தி அதிகாரி தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது அதிகாரி மீதான புகார் பொய் என்றும், ஒரு அதிகாரியை இப்படி நடத்தியிருக்க கூடாது என்றும் சவுதி தூதரகம் கூறியுள்ளது.

தர்ம சங்கடத்தில் போலீஸ்
ஆனால், குர்கான் போலீசாரோ, சவுதி தூதரக அதிகாரி மீதான புகார் என்று முதலில் தங்களுக்கு தெரியாது என்றும், இரு பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தனர், அந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளனர்.

பச்சைக்கொடி?
இந்த நிகழ்வுகள் குறித்து முழு அளவிலான அறிக்கையளிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் பச்சைக்கொடி காண்பித்தால்தான், சவுதி அதிகாரிக்கு எதிராக போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications