பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை 2018 பிப். 8-க்கு ஒத்திவைப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை 2019-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதியன்று விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தினார். ஆனால் இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனிடையே அயோத்திக்கு பதில் லக்னோவில் மசூதி கட்டலாம் என ஷியா தரப்பு யோசனையை முன்வைத்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், குறுகிய காலத்தில் 19,000 பக்க ஆவணங்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா எப்படி தாக்கல் செய்தார்? தங்களுக்கும் மனுதாரர்களுக்கும் அனைத்து ஆவணங்களையும் தரவும் இல்லை.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையின் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. ஆகையால் இந்த வழக்கின் விசாரணையை 2019-ம் ஆண்டு ஜூலை 15-க்கு ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டார். மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் எனவும் கபில் சிபல் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
இன்றைய விசாரணை குறித்து ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், லக்னோவில் மசூதி கட்டலாம் என்கிற தங்களது யோசனையை உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்திருக்கிறது என்றார். இந்த விசாரணைகளைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications