For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசு பாதுகாவலர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பசு பாதுகாவலர்களை கண்காணிக்க மாவட்ட்ந்தோறும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பசு பாதுகாப்பு என்ற பெயரால் தனிநபர்கள் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரிலான வன்முறைகளை ஒடுக்க உத்தரவிட வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளர் தெக்சீன் பூனவல்லா கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடந்த 6 மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

SC crackdown on Cow Vigilantism

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 21-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, பசு பாதுகாவலர்களை மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க கூடாது என என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு மீண்டும் வந்தது.

அப்போது, பசு பாதுகாவலர்கள் என்கிற பெயரில் தனிநபர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த பசுபாதுகாவலர்களை கண்காணிக்க மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
The Supreme Court ordered to the Centre and states to take urgent measures to take action against the cow vigilante groups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X