2ஜி: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி மனு- சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி எம்.பி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பதிலளிக்கக் கோரி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
2ஜி வழக்கு விசாரணையை முன்கூட்டியே விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி கனிமொழி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செப்டம்பர் 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

2 ஜி வழக்கு விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
ரத்து செய்ய மனு
இந்த நிலையில் கனிமொழி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைப்பு
இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டு 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
வழக்கை விரைந்து முடிக்க
இந்த நிலையில் கனிமொழி புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கு விசாரணையை முன்கூட்டியே விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்றம் விசாரணை
இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல்.தத்து, பினாகி சந்திரகோஷ் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடந்தது.
3 வாரங்களுக்குள் பதில்
விசாரணை தொடங்கியதும், இந்த மனு மீதான பதில் மனுவை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு எதிர்தரப்பு மனுதாரர் பிரசாந்த் பூஷன் மற்றும் சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சிறப்பு வழக்கறிஞர் தேர்வு
இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் நீதிபதியாக உள்ளதால், புதிதாக அந்த பணிக்கு நியமிக்கப்பட வேண்டிய சிறப்பு வழக்கறிஞரைத் தேர்வு செய்ய 3 பேர் பெயர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications