ஐ.பி.எல். பிக்ஸிங் முறைகேட்டை எந்த குழு விசாரிப்பது? தீர்ப்பை ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம்
டெல்லி: 6வது ஐ.பி.எல். போட்டிகளில் நிகழ்ந்த பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான புகாரை எந்த குழு விசாரிப்பது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
6வது ஐ.பி.எல். போட்டிகளில் பிக்ஸிங் விவகாரம் பெரும் பிரளயத்தை கிளப்பியது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும் நீதிபதி முத்கல் தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்தது.
அக்குழுவும் தமது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசன் உட்பட 13 பேர் மீது புகார் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சீனிவாசன் தற்காலிகமாக பதவி விலக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. தற்போது ஐ.பி.எல். நடைபெறும் காலத்தில் சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராகவும் நியமித்தது.
இதன் பின்னர், சீனிவாசன் உட்பட 13 பேர் மீதான புகாரை விசாரிக்க ஒரு குழுவை அமைக்குமாறு கிரிக்கெட் வாரியத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. கிரிக்கெட் வாரியமும் ரவிசாஸ்திரி உள்ளிட்ட மூவரது பெயரை பரிந்துரைத்தது.
ஆனால் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடைய மூவரையும் விசாரணைக் குழுவினராக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அத்துடன் நீதிபதி முத்கல் கமிட்டியே தொடர்ந்து விசாரணை நடத்தலாம் எனவும் கூறியது. இதை நீதிபதி முத்கல் கமிட்டியும் ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில் நீதிபதி முத்கல் கமிட்டி இந்த விசாரணையை நடத்தக் கூடாது என்றும் புதிய விசாரணை குழுவை அமைக்க தயார் என்றும் உச்சநீதிமன்றத்தில் இன்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்த விசாரணையின் போது கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் சீனிவாசன் நீடிப்பது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும் சீனிவாசன் உட்பட 13 பேர் மீதான புகாரை எந்த குழுதான் விசாரிப்பது என்பது தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications