சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போதைய சூழலில் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம்காலமாக தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழையலாம் என கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்புகள்
இந்த தீர்ப்பை அடுத்து பல்வேறு தடைகள், எதிர்ப்புகளை தாண்டி கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். இதனால் கேரள மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

மனுக்கள் தாக்கல்
இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேரளத்தை சேர்நத நாயர் சொசைட்டி, பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியானது.

அரசியல் சாசன அமர்வு
தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வாசித்தது.

7 அமர்வு
அப்போது உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக தீர்ப்பளித்தது. அதே நேரம் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்றும் அந்த அமர்வு தெரிவித்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications