பத்திரிக்கையாளர்களுக்கான ஊதிய குழு பரிந்துரை- ஏப்ரல் முதல் அமல்படுத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு

இது, உழைக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தித்தாள் பணியாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
மஜிதியா ஊதிய வாரிய பரிந்துரைகளுக்கு எதிராக செய்தித்தாள் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், பத்திரிகையாளர்களுக்கான ஊதியப் பரிந்துரைகளில் சரியான முறையே பின்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
மஜிதியா ஊதியக் குழு பரிந்துரைகளை வரும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நவம்பர் 11, 2011-ல் இருந்து மார்ச் 2014 காலக்கட்டத்துக்கான நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு 4 தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஜிதியா குழுவின் பரிந்துரையின்படி, பத்திரிகை நிறுவனங்கள் அவைகளின் ஆண்டு வருவாயின் அடிப்படையில் 8 பிரிவுகளாகவும், செய்தி நிறுவனங்கள் 4 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன என்றும், பத்திரிக்கை நிறுவனங்களில் முதல் 4 பிரிவுகளின் கீழ் வரும் பத்திரிகைகளில் பணியாற்றும் இதழாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் 35 விழுக்காடும், மற்ற நான்கு பிரிவுகளில் பணியாற்றுவோருக்கு 20 விழுக்காடும் மாறுபடும் என தெரிகிறது.
ஊதியம் மட்டுமின்றி, போக்குவரத்து, வீட்டு வாடகைப் படி ஆகியவனவும் இந்திய நகரங்களின் தர நிலை நிர்ணயத்திற்கேற்ப வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ற வகையில் படிகளும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மஜிதியா குழு பரிந்துரைத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications