ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு தேவையில்லாத நிலை வரப்போகிறது: அமித் ஷா அதிரடி
ஜம்மு: ‛‛ஜம்மு காஷ்மீரில் இன்னும் சில ஆண்டுகள் முழுமையாக அமைதி நிலவும். இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு தேவை இருக்காது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மவுலானா ஆசாத் மைதானத்தில் சிஆர்பிஎப் அமைப்பின் எழுச்சி தினவிழா இன்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
சிஆர்பிஎப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அமித்ஷா ஏற்று கொண்டார். அதன்பின் அவர் விழாவில் பேசினார். அப்போது அவர் சிஆர்பிஎப் குறித்து பெருமையாக பேசினார். அவர் கூறியதாவது:

அமைதி நிலவும்
காஷ்மீர், நக்சல் நடமாட்ட பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் என 3 இடங்களில் தான் நீங்கள்(சிஆர்பிஎப் வீரர்கள்) பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். அடுத்த சில ஆண்டுகளில் இந்த 3 பகுதிகளிலும் அமைதி நிலவும் என்பதை உறுதியாக கூறுகிறேன். அதன்பிறகு அங்கு சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு தேவைப்படாது. இது உறுதி. இது நிறைவேறினால் அதற்கான முழு பெருமையும் சிஆர்பிஎப் படையையே சேரும்.

சாதனை
மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்து மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதனால் காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து அமைதி திரும்புகிறது. இதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். இது நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது.

முக்கிய பங்கு
இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் படைப்பிரிவு நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் மக்களை மீீட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்து அமைதியாக வாக்களிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் சிஆர்பிஎப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

4 ல் ஒரு பங்கு
ஆண்டுதோறும் டெல்லியில் தான் விழா சிஆர்பிஎப் எழுச்சி தினவிழா நடத்தப்படும். இந்த முறை முதன் முதலாக முதன் முதலாக ஜம்மு காஷ்மீரில் விழா நடத்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் பிரிவில் 4ல் ஒரு பங்கு வீரர்கள் பதற்றமான ஜம்மு காஷ்மீரில் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் ஜம்மு காஷ்மீர் போீசார், எல்லை பாதுகாப்பு படையினர். தொழிற்பாதுகாப்பு படையினர், எஸ்எஸ்பி படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 ல் ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications