7 வருடங்களில் 30 குழந்தைகள் பலாத்காரம் செய்து கொலை- போலீசை கலங்கடித்த “சீரியல் கில்லர்”!
டெல்லி: டெல்லியில் கடந்த 7 வருடங்களில் 30 குழந்தைகளை கொன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடிய மிருகம் ஒருவன் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
டெல்லியில் வடமேற்கு பகுதியில் 6 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் ரவீந்திரகுமார் என்றவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவன் இதேபோன்று குறைந்தபட்சம் மேலும் 15 சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். அதில் அவன் சிறுவர், சிறுமிகளுக்கு சாக்லேட், பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஒதுக்குப்புறமாக கூட்டிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறி உள்ளான்.

அப்படி கொலை செய்த சிறுவர், சிறுமிகளின் உடல்களை வயல்வெளிகளில் வீசியும், பாதாளசாக்கடையில் போட்டும், புதைத்தும் வந்ததாக அவன் தெரிவித்துள்ளான். இந்த கொடூர குற்றங்களை அவன் 2009 ஆம் ஆண்டில் இருந்து செய்து வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவன், "நான் பாலியல் பலாத்காரம் செய்யும் போது, அவர்கள் அழக்கூடாது மற்றும் சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவர்களை கொலை செய்துவிடுவேன். நான் தப்பிப்பதற்காக அவர்களை கொலை செய்துவிடுவேன்" என்று கூறிஉள்ளான். 17 வயதில் இருந்து கொடூரன் இக்கொடூரத்தை நடத்தி வந்து உள்ளான் என்பதும் தெரியவந்து உள்ளது.
மேலும், "நான் குடிபோதையில் இருக்கும்போது என்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிடுவேன். நான் தவறு செய்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது. பின்னரே நான் செய்தது தவறு என்று வருத்தம் அடைவேன்" என்று கூறிஉள்ளான். ஒரு இடத்தில் சுமார் 2- 3 மாதங்களே தங்கிருப்பதாகவும், அப்பகுதியில் உறவினர்கள் வீட்டிற்கு வரும் குழந்தைகளை குறிவைப்பதாகவும் தெரிவித்து உள்ளான். அவன் வெளியிட்டு உள்ள கொடூரச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் போலீசாரின் இரும்பு நெஞ்சத்தினையே உருக்குவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications