பீகார் சட்டசபை ஐ.ஜ.த. தலைவராக நிதிஷ்குமார் செயல்பட ஹைகோர்ட் தடை: முதல்வராவதில் சிக்கல்
பாட்னா: பீகார் மாநில சட்டசபையின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டது சட்டவிரோதம்; இதனால் சட்டசபை தலைவராக நிதிஷ்குமார் செயல்பட தடை விதிக்கப்படுவதாக பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்த 130 எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டிருக்கும் நிதிஷ்குமாருக்கு இந்த உத்தரவு பெரும் பின்னடைவாகும்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் இம்மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியைத் தழுவியதால் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். தம்முடைய ஆதரவாளராக இருந்த ஜிதன் ராம் மஞ்சியை நிதிஷ் முதல்வராக்கினார்.
ஜிதன்ராம் மஞ்சி முதல்வரானது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலே எதிர்ப்பு வலுத்து வந்தது. கடைசியில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவுடனும் மோதினார் மஞ்சி.
மஞ்சியின் கலகக் குரல்- நிதிஷ் தேர்வு
இதனைத் தொடர்ந்து ஜிதன்ராம் மஞ்சியை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களான சரத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஜிதன்ராம் மஞ்சியோ இந்த கோரிக்கையை நிராகரித்தார். தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்றும் மஞ்சி கூறி வந்தார்.
அவர் கடந்த 7-ந் தேதி டெல்லி சென்றிருந்த நிலையில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மொத்தம் 111 எம்.எல்.ஏக்களில் 91 பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டசபையின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் அடிப்படையில் நிதிஷ்குமாரை சட்டசபையின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக சபாநாயகரும் நியமித்து உத்தரவிட்டார்.
மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் ஜிதன்ராம் மஞ்சி நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத்தை சந்தித்த நிதிஷ்குமார் தமக்கு மொத்தம் 130 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் இதுவரையில் எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.
ஆளுநருடனான இந்த சந்திப்பின் போது தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 130 பேரையும் அழைத்தும் சென்றார் நிதிஷ்குமார். இவர்களில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் 24 , காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ மற்றும் சுயேட்சைகள் சிலரும் அடங்குவர்.
பாட்னா ஹைகோர்ட்டில் வழக்கு
இதனிடையே மஞ்சியின் ஆதரவாளர்கள் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டசபை தலைவராக நிதிஷ்குமாரை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதனை இன்று விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக நிதிஷ்குமாரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டம் சட்டவிரோதமானது. அவரை சபாநாயர் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டசபை தலைவராக நியமித்ததும் சட்டவிரோதம்.
பீகார் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக நிதிஷ்குமார் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மாநிலத்தின் முதல்வர் யார் என்பதில் ஆளுநரின் முடிவுதான் இறுதியானது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பெரும் பின்னடைவு
பீகார் ஆளுநர் கேசரிநாத் தம்மை ஆட்சி அழைக்காததால் 130 எம்.எல்.ஏக்களுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க டெல்லியில் நிதிஷ்குமார் முகாமிட்டுள்ளார். இன்று இரவு 7 மணியளவில் ஜனாதிபதி முன் 130 எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பையும் நடத்தப் போவதாகவும் நிதிஷ்கூறியிருந்தார்.
இந்நிலையில் பாட்னா உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் பின்னடைவாகும். இத்தீர்ப்பைத் தொடர்ந்து நிதிஷ்குமாரை ஜனாதிபதி சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பீகார் சட்டசபை நிலவரம்
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 111 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு 87 உறுப்பினர்களும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு 24 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 5 உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 5 பேர் இருக்கிறார்கள்.
10 இடங்கள் தற்போது காலியாக இருப்பதால் சட்டசபையின் தற்போதைய பலம் 233. சட்டசபையில் முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போது நிதிஷ்குமாரை ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏக்களுடன் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவரும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் நிதிஷ்குமாருக்கு ஆதரவு.
மஞ்சியை ஆதரிக்குமா பா.ஜ.க?
ஜிதன்ராம் மஞ்சியைப் பொறுத்தவரையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் 87 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாரதிய ஜனதாவின் ஆதரவுடன் ஆட்சியில் நீடித்துவிட முடியும் என்பது கணக்கு. ஆனால் தற்போதைய தகவல்களின்படி மஞ்சியை பாரதிய ஜனதா ஆதரிக்காது என்றே கூறப்படுகிறது.
தற்போது பாட்னா உயர்நீதிமன்றமும் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்திருப்பது பீகார் அரசியலில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications