மேற்கு வங்கம்: ஒரே நாளில் 7 சிசுக்கள் மரணம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் 7 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று உயிரிழந்த அனைத்துக் குழந்தைகளுமே ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளாகும். அவற்றில், குறைமாதத்தில் பிறந்த குழந்தை, மிகக் குறைவான உடல் எடையுடன் பிறந்த குழந்தை, மூச்சுத் திணறல் பிரச்னை என பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே உயிரிழந்துள்ளன என்று கல்லூரியின் துணைத் தலைவர் எம்ஏ ரஷித் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த 7 பேர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் சிசுமரணங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் ஒரே நாளில் 9 சிசுக்கள் மரணமடைந்தனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் 12க்கும் மேற்பட்ட சிசுமரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+