‛ஸ்பா’வில் உல்லாசம்.. கண்ணாடி கதவை உடைத்து கைது செய்த ஐஏஎஸ் அதிகாரி! எங்கு தெரியுமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்பாவில் நுழைந்து திடீரென்று பெண் கலெக்டர் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு ஆண்களும், பெண்களும் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ‛ஸ்பா' என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

விபசாரத்தை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் கூட இந்த பிரச்சனை என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் தான் ஸ்பாக்களில் அடிக்கடி போலீசார் நுழைந்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ஸ்பாவில் பெண் கலெக்டர் ஒருவர் நுழைந்து அதிரடியாக நுழைந்து 5 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் டினா தாபி. இவர் இன்று சாமுண்டா சர்க்கிள் பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
அப்போது அருகே உள்ள ஸ்பா சென்டரை பார்த்ததும் டினா தாபிக்கு சந்தேகம் எழுந்தது. அதாவது அந்த ஸ்பாவில் விபசாரம் நடக்கலாம் என்று அவர் எண்ணினார். இதையடுத்து அதிகாரிகளை ஸ்பாவிற்கு அனுப்பி சோதனை செய்ய பணித்தார். ஆனால் ஸ்பாவில் இருந்த ஊழியர்கள் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து கலெ க்டர் டினா தாபி களமிறங்கினார்.
ஸ்பாவின் கேட்டை திறக்கும்படி அவர் கூறினார். ஆனால் திறக்கவில்லை. இதையடுத்து கண்ணாடி கதவை உடைக்க கலெக்டர் டினா தாபி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் ஸ்பாவின் கண்ணாடி கதவை உடைத்தனர். கலெக்டர் டினா தாபி, அதிகாரிகள், போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஸ்பாவில் 5 பெண்கள், 2 ஆண்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் தவறான செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதாவது உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 5 பெண்கள் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். கலெக்டர் டினா தாபி உத்தரவில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதான 5 பெண்களில் ஒருவர் ஸ்பாவின் உரிமையாளர் ஆவார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications