ஆசாராம் மீது புகார் கூறிய பெண்ணுக்கு மன நிலை சரியில்லை.. வக்கீல் ஜெத்மலானி அதிரடி

Subscribe to Oneindia Tamil

Sexual assault case: Asaram's lawyer Jethmalani says girl is mentally unstable
ஜோத்பூர்: சாமியார் ஆசாராம் பாபு சார்பில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகிறார். பாபு மீது புகார் கூறிய 16 வயதுப் பெண்ணுக்கு மன நிலை சரியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

16 வயது சிறுமியை தனது ஜோத்பூர் ஆசிரமத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசாராம் பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆண்மைப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். அவரது சிறைக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பாபுவால், செப்டம்பர் 18ம் தேதி வரை வெளியில் வர முடியாத நிலை.

இந்த நிலையில், ஆசாராமுக்காக ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறுகையில், புகார் கூறிய சிறுமிக்கு மன நிலை சரியில்லை. இதை கோர்ட்டில் நிரூபிப்போம் என்றார்.

காங்.குக்கு சிக்கல் வருமா...?

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சிக்கல் வரும் போலத் தெரிகிறது. அதாவது கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு, இந்தூரில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்காக ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்தது. அந்த நிலம் தொடர்பான வழக்கு மத்திய பிரதேசக் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நில ஒதுக்கீட்டைச் செய்தது அப்போதைய முதல்வராக இருந்த திக்விஜய் சிங் என்பதால் இந்த விவகாரத்தால் காங்கிரஸ் கட்சியும் நெளியத் தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+