கார்களில் இரவு கூட்டி சென்று மறுநாள் காலை அழைத்து வரப்படும் காப்பக சிறுமிகள்
கார்களில் இரவு அழைத்து சென்று விட்டால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படும் உ.பி. மாநில காப்பக சிறுமிகள்.
Recommended Video

தியோரியா: உ.பி. காப்பக சிறுமிகளுக்கு பாலியல் புகாரில் ஒரு பகுதியாக கார்களில் இரவு அழைத்து சென்றால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தியோரியாவில் ஒரு காப்பகம் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இதை கிரிஜா திரிபாதி, அவரது கணவர் மோகன் திரிபாதி மற்றும் அவரது மகள் ஆகியோர் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இதற்கு அரசிடமிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் காப்பகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இங்கு சில முறைகேடுகள் நடந்து வருவதாக சிபிஐ அளித்த தகவலின் பேரில் அரசும் தனது நிதியுதவி அளிப்பதை நிறுத்திக் கொண்டது.

10 வயது சிறுமி
எனினும் அந்த காப்பகத்தை தம்பதியினர் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த காப்பகம் லக்னோவிலிருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த காப்பகத்திலிருந்து 10 வயது சிறுமி ஒருவர் தப்பி வந்து போலீஸாரிடம் ஒரு புகாரை அளித்தார்.

காரில் அழைத்து செல்லப்படுவது
அதில் காப்பகத்தில் உள்ள 40 சிறுமிகள் இருந்தனர். அந்த சிறுமிகள் சிகப்பு, வெள்ளை, கருப்பு நிற கார்களில் இரவு அழைத்து செல்லப்பட்டால் மறுநாள் காலையில்தான் அழைத்து வரப்படுவர் என்று அந்த சிறுமி புகார் அளித்தார்.

வேலையாட்கள்
மேலும் சிறுமிகள் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுவதாகவும், காலை நேரங்களில் வேலையாட்கள் போல் அவர்கள் நடத்தப்படுவதாகவும் அந்த சிறுமி கூறினார்.

மறுநாள் அழுதல்
காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக அந்த காப்பகத்தில் வசித்து வந்தார். அவரை வேலைக்காரி போல் தம்பதியினர் நடத்துவதாக கூறினார். மேலும் இரவு அழைத்து செல்லப்படும் சிறுமிகள் மறுநாள் காலையில் வந்து அழுவதாகவும் கூறினார்.

சட்டவிரோத தத்தெடுப்பு
இங்கு தத்தெடுப்புகளும் சட்டவிரோதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அந்த காப்பகத்துக்கு சென்று 24 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மேலும் 15 சிறுமிகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

கோரிக்கை
இதையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கிய நடவடிக்கைகளை யோகி ஆதித்யநாத் அரசு எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பீகார் காப்பகத்திலும் இதே நிலைதான்
இதேபோல் பீகாரில் காப்பக உரிமையாளர்கள் மற்றும் காப்பகத்துக்கு நிதியுதவி அளிப்பவர்களால் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை தட்டி கேட்ட ஒரு சிறுமியை கொன்று காப்பக வளாகத்திலேயே புதைத்ததாக கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications