Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் காதில் விழலயா? இதுல கலாச்சார பெருமை வேற? கொதிக்குது ஜார்க்கண்ட்.. இந்தியாவுக்கே இது அவமானம்

Subscribe to Oneindia Tamil

ஜார்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு, இந்திய அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.. "வெட்கக்கேடு" என்று இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கி உள்ளது இந்த கொடூர சம்பவம்.

ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை, கணவர் முன்பே 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடைபெற்றது.. தென்கொரியாவை சேர்ந்த யூடியூபர் மியோசி என்ற பெண், யூடியூப் வீடியோவுக்காக மும்பைக்கு வந்திருந்தார்.. கார் ரோடு பகுதியில் இரவு நேரம், தன் சேனலுக்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் மியோசி.

shameful trending Jharkhand Spanish couple incident and TN Minister Mano thangaraj attack PM Modi BJP Government

லைவ் வீடியோ: இவரது சேனலுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உண்டு.. சம்பவத்தன்று மும்பையில் லைவ் வீடியோ போட்டிருந்ததால், ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நிகழ்ச்சியில் அப்போது பங்கேற்றிருந்தனர்.

அந்த நேரம் பார்த்து, மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர், மியோசியிடம் நெருங்கி உன் பெயர் என்ன? என்று கேட்டார். பிறகு, திடீரென மியோசியின் கையை பிடித்து இழுத்து, "பைக்கில் என்னோடு வா" என்று தவறான நோக்கத்துடன் அழைத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மியோசி மறுத்துள்ளார். அப்போதும் அந்த இளைஞர் விடாமல், முத்தம் தர முயன்றுள்ளார்.

மும்பை போலீஸ்: இந்த சம்பவம் குறித்து, மியோசி மும்பை போலீசில் புகார் தரவும், போலீசாரும் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட 2 பேரை கைது செய்திருந்தது. அந்த பெண்ணும், மும்பை போலீசுக்கு நன்றி சொல்லி இருந்தார். ஆனாலும், இந்தியாவின் மானம் தென்கொரியா வரை பறந்துவிட்டது.

இதோ இன்னொரு கொடுமை நம்ம நாட்டிலேயே நடந்துள்ளது.. ஆசிய நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒரு பைக் ரைடு செல்ல முடிவுசெய்திருந்தனர்.. அந்தவகையில், பைக்கில் முதலில் பாகிஸ்தான் சென்றார்கள்.. பிறகு அங்கிருந்து வங்கதேசம் சென்றார்கள்.. அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பீகார் வழியாக ஜார்கண்ட் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.. இந்தியாவை கடந்து பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்பதுதான் இவர்களது பயண திட்டமாக இருந்திருக்கிறது.

தற்காலிக கூடாரம்: பைக்கிலேயே நிறைய ஊர்களுக்கு செல்வதால், இரவு நேரங்களில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி விடுவார்கள்.. அப்படித்தான், கடந்த 1ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில், தும்கா என்ற மாவட்டத்துக்கு சென்றிருக்கிறார்கள். இந்த தலைநகர் ராஞ்சியில் இருந்து, சுமார் 300 கி.மீ தூரத்தில் உள்ளது.

இரவு நேரமாகிவிட்டதால், அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.. அன்றைய தினம் 11 மணிக்கு, கிட்டத்தட்ட 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று தற்காலிக கூடாரத்துக்குள் புகுந்து சுற்றுலா தம்பதியை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.. பிறகு அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ரத்த காயங்கள்: அந்தவழியாக வந்த ரோந்து போலீசார், வெளிநாட்டு பயணிகள் 2 பேரும் ரோட்டோரத்தில் உடம்பெல்லாம் ரத்தம் வழிய விழுந்து கிடப்பதை பார்த்து, மீட்டுள்ளனர்.. மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போதுதான், அந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி உள்ளனர்.. மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநில அரசியலில் இந்த சம்பவம் எதிரொலித்து வருகிறது. "இந்தியாவுக்கு அவமானம்" என்று இணையத்தில் இந்த சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது.. அரசியல் பிரமுகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கண்டனம்: "இதை கேள்விப்பட்டதும் நொறுங்கிப் போனேன், நீங்கள் இருவரும் கோட்டயம் பகுதிக்கு வந்தபோது, அங்குள்ள நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு விருந்தளித்திருந்தனர். இதுபோன்ற சம்பவம் எங்கும் யாருக்கும் நடக்கக் கூடாது" என்று நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார்.

"வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நடத்துவது போல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் நடத்துகின்றனர். இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது" நடிகை சதா பதிவிட்டுள்ளார்.

மனோ தங்கராஜ்: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி பேசும் கலாச்சார பெருமையா?" என்று பதிவிட்டுள்ளார்.

கண்டனங்களும், ஆவேசங்களும் இப்படி எழுந்துவரும் நிலையில், இந்தியாவின் மானம் ஸ்பெயின் நாட்டிலும் கப்பலேறி உள்ளது, பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+