சசி தரூர்- பாக். பத்திரிக்கையாளர் புதிய காதல்: ட்விட்டரில் அம்பலப்படுத்திய மனைவி சுனந்தா!
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் ட்விட்டர் கணக்கு மூலம் அவரது மனைவி சுனந்தா தனது கணவருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளருக்கும் இடையேயான உறவை அம்பலப்படுத்தியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசி தரூர் தனது அன்றாட நடவடிக்கைகள் குறித்து ட்விட்டரில் மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருப்பார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கில் சில காதல் தகவல்கள் போஸ்ட் செய்யப்பட்டன. இதை பார்த்த அவரது பாலோயர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அதனால் அதை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்வதாகவும் தரூர் தெரிவித்தார்.

ஹேக் செய்யப்படவில்லை
சசி தரூரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும், அவரது கணக்கில் இருந்து தான் தான் அந்த தகவல்களை வெளியிட்டதாகவும் தரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

காதல் செய்திகள்
தரூருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் அனுப்பிய காதல் செய்திகளை ட்விட்டரில் போட்டு அந்த பெண் எப்படி தனது கணவரை பின் தொடர்கிறார் என்பதை உலகிற்கு தெரிவிக்கவே இவ்வாறு செய்ததாக சுனந்தா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பெண்
எங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நான் தான் அந்த ட்வீட்களை போஸ்ட் செய்தேன். இது என்னால் சகித்துக் கொள்ள முடியாது. இந்த பாகித்ஸான் பெண் ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட். அவர் என் கணவரை பின் தொடர்கிறார். ஆண்கள் எப்படி என்று உங்களுக்கு தெரியும் என்று சுனந்தா ட்வீட் செய்துள்ளார்.

மெஹர்
இந்நிலையில் லாகூரைச் சேர்ந்த மெஹர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஓகே, என்ன நடக்கிறது? யார் எனக்கு ட்வீட் செய்வது?. எனக்கும் சசி தரூருக்கும் இடையே உறவு இருந்தது. அவர் எனக்கு ட்வீட் செய்கிறார்?? எனக்கு சசி தரூரை தெரியும். நான் அவரை மதிக்கிறேன். அது குறித்து வெளிப்படையாக எழுதினேன் என்றார்.

காதல் ட்வீட்கள்
"ஐ லவ் யூ, சசி தரூர். நான் உங்களை காதலிக்கையிலேயே செல்கிறேன். நிரந்தரமாக. ஆனால் எப்பொழுதும் நான் உங்கள் மெஹர்." "மெஹர் எனக்கும் உனக்கும் இடையிலான கள்ளத்தொடர்பு குறித்து என் மனைவி கண்டுபிடித்துவிட்டார்."












Click it and Unblock the Notifications