9ஆம் வகுப்பு சிறுமிக்கு குழந்தை: பாலியல் பலாத்காரம் செய்த சிவசேனைத் தலைவர் கைது
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவசேனைக் கட்சித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவசேனைக் கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக இருப்பவர் வசுதேவ் நம்பியார். தாணேவில் உள்ள கஷிமிரா நகரத்தில் இவருக்கு சொந்தமாக ஒரு பள்ளியும், கோவிலும் உள்ளன.
அந்தப் பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தாணே மாவட்டத்தின் மிரா கிராமத்தில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அந்தச் சிறுமியை வசுதேவ் நம்பியார் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இதுகுறித்து வெளியில் கூறினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி அந்தச் சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த அந்தச் சிறுமிக்கு கடந்த வாரம் குறைமாதக் குழந்தை ஒன்று பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தெரிவித்ததை அடுத்து நம்பியார் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நம்பியாருக்கு, இம்மாதம் 11ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டது என்று கஷிமிரா காவல்நிலைய ஆய்வாளர் அனில் கதம் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications