ஜல்லிக்கட்டு எழுச்சி எதிரொலி..ரேக்ளா பந்தயத்துக்கு தடையை நீக்க சிவசேனா போர்க்கொடி
மும்பை: ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மஹாராஷ்டிராவில் மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகள் வதைக்கப்படுவதாக கூறி பிராணிகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதித்தது. ரேக்ளா பந்தியத்தில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டி, ரேக்ளா பந்தயங்கள் நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு தமிழகம் முழுவதும் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் மிரண்டு போன மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் அவசர சட்டத்தை பிறப்பித்தார். இதையடுத்து நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நிரந்தர சட்டம் இயற்றும் வரை வாடி வாசல் அருகே யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்தனர். போராட்டத்தின் தீவிரம் கருதி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தநிலையில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி போர்க்குரல் எழுப்பியுள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்ததலைவரும், ஷிரூர் தொகுதி எம்.பி.யுமான சிவாஜிராவ் அதால்ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அங்குள்ள முதல்வர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நிர்வாகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியைக்கூட ஜல்லிக்கட்டுக்காக தமிழக முதல்வர் சந்தித்தார்.
தமிழகத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பிரதமர் மோடியைச் சந்தித்து, மாட்டுவண்டிப் பந்தயம் நடத்த அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications