மாணவ, மாணவியரை மாட்டை போன்று அடிக்கும் ஆசிரியர்: பகீர் வீடியோ
கர்னல்: ஹரியானாவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவ, மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் நகரில் தனியார் ஆங்கில பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் பிரதீப் அரோரா. அவர் தனது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் வீட்டுப்பாடம் முடிக்காதது, தாமதமாக வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்களை ஈவு, இரக்கமின்றி கண்மூடித்தனமாக அடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வகுப்பறையில் மாணவிகளின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து, காதை பிடித்து இழுத்து அடித்தது மற்றும் மாணவர்களை கட்டையால் கையில் அடித்தது ஆகியவற்றை மாணவர் ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளூர் செய்தி தொலைக்காட்சி சேனலிடம் அளித்துவிட்டார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த போலீசார் அரோரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரோரா மாணவ, மாணவியரை அடிப்பது குறித்து யாரும் புகார் அளிக்காமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மாணவ, மாணவியர் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை அடிப்பதாக அரோரா தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications