சாக்கடை பிரச்சினை... தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் - போலீஸ் குவிப்பு
கழிவு நீர் கால்வாய் பிரச்சினைக்காக 12 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அக்கம் பக்கத்து சண்டை அடிதடியில் முடியும், ஆனால் இளம் பிஞ்சை கசக்கி போட்டுள்ளனர் கயவர்கள்.
கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பக்கத்து வீட்டு சண்டை படுபாதக செயலில் முடிந்துள்ளது. சாக்கடை பிரச்சினைக்காக தலித் சிறுமியை ஆறுபேர் கொண்ட கும்பல் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே சீரழித்துள்ளனர்.
கோரக்பூரில் இந்த அதிரவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஷி நகர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் உள்ள சிறுமியின் குடும்பத்தினருக்கும், கடந்த வெள்ளிக்கிழமையன்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக சண்டை நடந்துள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் கழிவுநீர் கால்வாய் கட்ட முடிவு செய்தனர். அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளனர்.

மாலை நேரத்தில் வீட்டில் இருந்த சிறுமியை இழுத்துக்கொண்டு போய் குடும்பத்தினர் கண் முன்னிலையிலேயே கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தயாரும், சிறுமியும் போலீசில் புகார் அளித்துள்ளனர். 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடி தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications