சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 16 தொழிலாளர்கள் மீட்பு!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவியில் பனிப்பாறை வெடிப்பால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷிகங்கா மின் திட்ட கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வந்த 150 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கினர்.

#WATCH | Uttarakhand: ITBP personnel rescued all 16 people who were trapped in the tunnel near Tapovan in Chamoli. pic.twitter.com/M0SgJQ4NRr
— ANI (@ANI) February 7, 2021
தற்போது வரை 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. தபோவனம் அருகே நீர் மின் நிலையம் அமைப்பதற்கான சுரங்க பணி நடைபெற்று வருகிறது. இங்கும் வெள்ளம் சூழ்ந்ததால் சுரங்க பணிகளில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

#WATCH| Uttarakhand: ITBP personnel approach the tunnel near Tapovan dam in Chamoli to rescue 16-17 people who are trapped.
— ANI (@ANI) February 7, 2021
(Video Source: ITBP) pic.twitter.com/DZ09zaubhz
தகவலறிந்த இந்திய திபெத் எல்லை படை போலீஸார் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளில் மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் ஈடுபட்டனர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications