நிராகரித்த வீடுகளைத் திரும்பக் கேட்கும் ஸ்லம்டாக் மி்ல்லினியர் குட்டி நட்சத்திரங்கள்
மும்பை:ஆஸ்கர் விருது பெற்ற படமான ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தங்களுக்கு மகாராஷ்டிர அரசு அளித்து பின்னர் தாங்கள் நிராகரித்த வீடுகளை மீண்டும் கேட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு வெளிவந்து ஆஸ்கர் விருது பெற்ற டேனி பாயலின் ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த ரோட்டோர நட்சத்திரங்கள் ரூபினா மற்றும் அஸார். அப்போது மகாராஷ்டிர மாநில வீட்டு வசதி ஆணையம் அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ஒரு படுக்கையறை,சமையலறை வசதி கொண்ட வீட்டை மால்வனி பகுதியில் அளித்தது.
வீட்டு வசதி ஆணையத்தின் மும்பை பகுதி அதிகாரி அமர்ஜித் சிங் மன்காஸ் மற்றும் மும்பை காங்கிரஸ் அந்த வீடுகளுக்கான பணத்தை அளித்து இருந்த நிலையில் அச்சிறுவர்களின் பெற்றோர் பாந்த்ரா பகுதியில் தங்களது குடிசை பகுதிக்கு அருகிலேயே வீடு வேண்டும் என அதனை நிராகரித்து விட்டனர்.
தற்போது 5ஆண்டுகள் கழித்து இரு சிறுவர்களின் பெற்றோரும் மகாராஷ்டிர வீட்டு வசதி ஆணையத்திடம் அவ்வீடுகளை மீண்டும் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபினாவின் தந்தை வீட்டு வசதி ஆணைய அலுவலகத்திற்கு தினமும் இதற்காக சென்று வருகிறார்.அதனை பற்றி அவரிடம் கேட்ட போது,"நான் கடந்த ஒரு மாதமாக ஆணையத்தில் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால்,அவ்வாணைய ஊழியர்கள் என்னை அலைக்கழித்து வருகின்றனர்.நான் ஆணைய உயர் அதிகாரி கோலியை பார்க்க முற்பட்ட போது அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டனர்"என்று தெரிவித்தார்.
மேலும் அவர் அந்த வீடுகளுக்கான ஆவணங்களைக் காட்டிய போது அவை செல்லாது என தெரிவிக்கப்பட்டதாகவும்,ஆனால்,அவ்வீடுகளுக்கான தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது,ரூபினா அலிக்கு 16வயதும்,அஸாருக்கு 15 வயதும் நடந்து வருகிறது.இருவரும் படித்து வந்தாலும் அவர்களின் எதிர்கால கனவு நடிப்புதான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications