காஷ்மீரில் விடிய விடிய துப்பாக்கிச்சூடு: 4 தீவிரவாதிகள், ராணுவ வீரர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள வில்காம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில போலீசார், ராணவ வீரர்கள் வில்காம் கிராமத்திற்கு சென்றனர்.

Soldier, 4 terrorists killed in Jammu and Kashmir gunfight

அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்களும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நேற்று மாலை துவங்கிய துப்பாக்கிச்சூடு விடிய விடிய நடைபெற்றது.

இதில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அதே சமயம் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள லாதூரா கிராமத்தில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே 9 மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+