மாமா.. சாப்பிட வாங்க மாமா.. ஆசையோடு விருந்துக்கு கூப்பிட்ட மருமகன்.. நம்பி போனா!
மாமனாரை விருந்துக்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்ட மருமகன்
தேஹ்ரடுன்: "மாமா.. சாப்பிட வாங்க மாமா.." என்று மருமகன் ஆசையோடு கூப்பிடவும், சரி போய் சாப்பிட்டுட்டுதான் வருவோமே என்று நம்பி போனார் அந்த மாமா.. ஆனா இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை.
உத்தரகாண்ட் மாநிலம் சுல்தான்பூர்பட்டியைச் சேர்ந்தவர் ரயீஸ் அகமது. இவருக்கு ருஹ்ஷர் என்ற மகள் இருக்கிறார். இக்ரம் என்ற மாப்பிள்ளையை பார்த்து அகமது கல்யாணம் செய்து வைத்தார்.

கொஞ்ச நாள் முன்னாடிதான் கல்யாணம் ஆனது.. போன பிப்ரவரி மாசம் வரதட்சணை பிரச்சனை வீட்டில் எழுந்துள்ளது. புருஷன் சும்மா இருந்தாலும், அவரது சகோதரிகள் இந்த விவகாரத்தை கிண்டினர்.
இதனால் இளம் தம்பதிக்கு இடையே சண்டை ஆரம்பமானது. தினமும் தகராறு என்று வந்துவிடம், வேறு வழியில்லாமல் மகள், அப்பா அகமதுவிடம் வந்து சொல்லி அழுதார். அகமதுவோ, பஞ்சாயத்தையே கூட்டிவிட்டார். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் இந்த விஷயம் பேசப்பட்டது. கடைசியில் பொண்ணு, மாப்பிள்ளையை தனிக்குடித்தனம் அனுப்பிடலாம் என்று முடிவானது.
அதன்படியே தனிக்குடித்தனமும் போனார்கள். அப்போது மாமனாரை மருமகன் விருந்துக்கு கூப்பிட்டுள்ளார். மாப்பிள்ளை கூப்பிட்டால் போவதுதானே மரியாதை என்று மாமாவும் வந்துள்ளார். வந்த இடத்தில் திரும்பவும் வரதட்சணை சமாச்சாரம் ஆரம்பமானது. அது சண்டையாக மாறியது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாப்பிள்ளை, மாமாவை துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார். அது மட்டுமில்லை.. இப்படி என் மாமனாரை நான்தான் துப்பாக்கியால் சுட்டேன் என்று போலீசுக்கும் போன் பண்ணி சொன்னார். அடுத்த 20 நிமிஷத்தில் போலீஸ் வந்து மருமகனை கைது செய்து கொண்டு போனது. படுகாயமடைந்த மாமா, இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்!
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications