அப்பா பால்காரர்... டோணிதான் இன்ஸ்பிரேஷன்.. கிரிக்கெட் உலகில் கலக்க போகும் இளம் வீரர்
நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த அணியில் ராஞ்சியை சேர்ந்த வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பங்கஜ் யாதவ் என்ற அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அதே போல் அவர் வீட்டில் யாருக்கும் அவர் கிரிக்கெட் விளையாடுவதே பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் நேரடியாக இந்திய அண்டர் 19 அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இதனால் அவர் இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளார்.

அப்பா பால்காரர்
இந்திய அண்டர் 19 அணியில் தற்போது சேர்ந்து இருக்கும் பங்கஜ் யாதவின் தந்தை பால்காரர் ஆவார். இவர்களது குடும்பமே மிகவும் வறுமையான குடும்பம் ஆகும். தினமும் மூன்றுவேளை சாப்பிடுவதற்கு கூட பணம் இருக்காது என்று இவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தினமும் கிரிக்கெட் போட்டி முடித்துவிட்டு களைப்பில் சமயங்களில் சாப்பிடாமலே தூங்குவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

டோணி
இவர் தனக்கு கிரிக்கெட் உலகில் டோணி தான் எல்லாமே என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் டோணியை பார்த்துதான் தான் வளர்ந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் எதிர்காலத்தில் டோணி போல மாறவேண்டும் என்றும் ஆசை தெரிவித்து இருக்கிறார் பங்கஜ் யாதவ். டோணியும் இவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கும் பிடிக்காது
இந்த நிலையில் இவரின் தந்தையும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "எனக்கு அவன் கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கூட பிடிக்காது. அவன் எப்போதும் படிப்பில் நன்றாக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது கிரிக்கெட்டில் பெரிய ஆள் ஆகி இருக்கிறான். அவனுக்கு டோணி பிடிக்கும். ஒருநாள் அவரை போல பெரிய ஆளாக வருவான்'' என்று கூறியுள்ளார்.

சாதனை
இவர் அண்டர் 19 அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதே மிகவும் ஆச்சர்யமான விஷயம் ஆகும். இவர் முதல்தர போட்டிகள் எதிலும் பெரிதாக விளையாடியதே இல்லை. அதேபோல ஐபிஎல், ராஞ்சி போட்டிகளிலும் விளையாடியது இல்லை. ஆனாலும் மிகவும் திறமையான வீரரான இவர் நேரடியாக அண்டர் 19 உலகக் கோப்பை அணிக்கே தேர்வாகி உள்ளார். ஜனவரி 14 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியை இவர் விளையாடுவார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications