பெரும் பரபரப்பு! மேற்கு வங்கத்தில் நடுவானில் புயலில் சிக்கிய விமானம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் அருகே தனியார் உள்நாட்டு விமானம் புயலில் சிக்கி தட்டுத் தடுமாறியதால் பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் நோக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் பி737 விமானம் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. 40 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் உள்ள காஜி நஜ்ருல் இஸ்லாம் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.
Recommended Video
அப்போது அங்கு வீசிய பலத்த புயலில் விமானம் சிக்கியதால் தரையிறங்க முடியாமல் தட்டுத் தடுமாறியது. விமானம் பயங்கரமாக குழுங்கியதால் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்த பயணிகள் கீழே விழுந்தனர். சிலர் மீது விமானத்திற்குள் இருந்த பொருட்கள் விழுந்தன. 2 பயணிகள் மீது விமானத்தில் உணவு கொண்டு செல்லும் தள்ளுவண்டி விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்தார்.
நடுவானில் புயலில் சிக்கியதை அறிந்த விமானி அவசரமாக அண்டால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முயன்றார். புயல் காரணமாக 3 முறை விமானம் நடுவானில் குலுங்கியதாக விமானத்தில் சென்ற பயணி தெரிவித்து உள்ளார். பலரும் சீட் பெல்டுகள் அணிந்து இருந்ததாகவும், ஆனால், அதிர்வின் காரணமாக சீட்டை விட்டு பயணிகள் குதித்ததாகவும் பயணிகள் கூறுகின்றனர்.
இதனால் விமானத்தில் சென்ற 40 பேர் காயமடைந்து அண்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்த 10 பேர் தவிர மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். படுமாயமடைந்த 10 பேருக்கும் காயங்கள் அதிகம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனாலும் உயிருக்கு ஆபத்தில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications