ஜனாதிபதி மாளிகையில் முப்படைகள் அணிவகுப்புடன் கோத்தபாயவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
Recommended Video
டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று முப்படைகள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்சேவை அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்தினார். மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறும் கோத்தபாயவுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை சென்று கோத்தபாயவை சந்தித்தார். இந்நிலையில் நேற்று மாலை 2 நாட்கள் பயணமாக கோத்தபாய ராஜபக்சே இந்தியா வருகை தந்தார்.
அவரை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். இன்று காலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கோத்தபாய ராஜபக்சே சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். அப்போது ஜனாதிபதி மாளிகையில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு முப்படைகள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications