“அவங்களே கொட்டுவாங்களாம் அவங்களே அள்ளுவாங்களாம்” தூய்மை இந்தியாவில் பாஜக தலைவரின் கூத்து!
டெல்லி: டெல்லியில் குப்பைகளை கொட்டி பின்னர் அதை சுத்தம் செய்த மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் லோதி சாலையில் உள்ள இஸ்லாமிக் சென்டர் பகுதியில் நேற்று முன்தினம் "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
இதில் மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா கலந்து கொண்டார். இங்கு நடந்த சுத்தப்படுத்தும் பணிதான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
குப்பையைக் கொட்டி சுத்தம்:
சதீஷ் உபாத்யாயா சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அங்கு டிராலிகளில் சாலை ஓரம் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதும் அதன்பின்னர் சதீஷ் உபாத்யாயா சுத்தம் செய்யும் காட்சிகளும் சமூக இணையதளங்களில் வந்துள்ளன.
இதுதான் அழகா?:
சுத்தமாக இருந்த பகுதிகளில் குப்பைகளை கொட்டி சுத்தம் செய்வதுதான் தூய்மை இந்தியா திட்டமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
இரட்டை வேடக் பாஜக:
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், "இந்த நடவடிக்கையின் மூலம் பாஜவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. டெல்லியில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
வேடிக்கையான திட்டம்:
ஆனால் அதை பாஜக ஆளும் மாநகராட்சிகள் சுத்தம் செய்வதே இல்லை. இப்போது குப்பைகளை கொட்டி சுத்தம் செய்யும் பணியில் சதீஷ் உபாத்யாயா ஈடுபட்டு அவர்களின் திட்டத்தையே வேடிக்கையாக்கி உள்ளார்'' என்றார்.
அக்கறை இல்லை:
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அசுதோஷ் கூறுகையில், " பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் உண்மையிலேயே பாஜவுக்கு அக்கறை இல்லை என்பதை சதீஷ் உபாத்யாயாவின் இச்செயல் வெளிப்படுத்தி உள்ளது'' என்றார்.
சாமி சத்தியமா தெரியாதுங்கோவ்:
இதுகுறித்து சதீஷ் உபாத்யாயா கூறுகையில், "நடந்த சம்பவம் எனக்கு தெரியாது. சாலையில் கிடந்த குப்பையை மட்டுமே நான் சுத்தம் செய்தேன்'' என்றார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்!












Click it and Unblock the Notifications