இடியோடு கொட்டிய கோடை மழை..மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலியான சோகம்
கொல்கத்தா: இடிமின்னலுடன் கொட்டி தீர்த்த கோடை மழையால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறியுள்ளார்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசக்கூடும் என கடந்த சில வாரங்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

வெப்ப அலையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எனவும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களை அனுப்பியிருந்தது. மக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன.
கடந்த வாரங்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. நாட்டின் தலைநகரமான டெல்லியில் அதிக அளவில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில் பல மாநிலங்களில் கோடை மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்து வருகிறது.
இதனிடையே அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது போலவே, மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
இதேபோல பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications