ஜல்லிக்கட்டு வழக்கில் விசாரணை முடிந்தது- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டன. இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து விசாரணைகளும் உச்சநீதிமன்றத்தில் இன்று முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் தடை விதித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் 7.1.2016-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியது. இதை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு வாதங்களை முன்வைத்தது.
இவ்வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, விலங்குகள் நல வாரியம் அனைத்தும் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்திருந்தன. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் இன்று இவ்வழக்கில் ஆஜராகி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடினார்.
இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்ததால் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications