ஜெய்பூரில் சொகுசு காரில் இருந்து ரூ. 25 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சொகுசு கார் ஒன்றை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் இருந்த ரூ. 25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெய்பூரில் உள்ள மால்வியா நகர் சோதனைச் சாவடி வழியாக வந்த சொகுசு காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர்.
கபில் சவுகான் என்பவருக்கு சொந்தமான அந்த காரில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 25.54 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கபில் சவுகானால் விளக்கம் அளிக்க முடியவில்லை.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஜெய்பூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை ரூ.1.03 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications