வங்கதேச பயணம்: மேற்கு வங்க முதல்வருடன் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை!
டெல்லி: தமது வங்கதேச பயணத்தை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக வங்கதேசம் செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறுவோர் குறித்து அஸ்ஸாம் மாநில அரசுடன் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தி இருந்தார். மேலும் வங்கதேசத்தில் இருந்து மேகலாயாவின் ஷில்லாங் வழியே அஸ்ஸாமுக்கு பேருந்து போக்குவரத்தை இயக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தீஸ்தா நதிநீர் விவகாரம், எல்லை விவகாரங்கள் குறித்து மமதாவுடன் சுஷ்மா விவாதித்தார்.
2011ஆம் ஆண்டு முந்தைய பிரதமர் மன்மோகன்சிங், வங்கதேசம் பயணம் மேற்கொண்ட போது தீஸ்தா நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் செல்ல மமதா பானர்ஜி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications