பாஸ்போர்ட்டுக்காக என்னை நெருக்கிய காங். தலைவர், அம்பலப்படுத்துவேன்- பரபர சுஷ்மா
டெல்லி: நிலக்கரி ஊழலில் சிக்கி குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள தனது தலைவர் ஒருவருக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை கடுமையாக நெருக்கி வந்தார் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அந்தத் தலைவரை தான் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவிட் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அயோக்கியன்னா நீ மட்டும் யோக்கியமா என்று கேட்கும் அளவில்தான் அரசியல்வாதிகள் உள்ளனர்.

தன்னைப் பார்த்து ராஜினாமா செய்யக் கோரும் காங்கிரஸுக்கு நெருக்கடி தர புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார் சுஷ்மா. இது நாள் வரை அதுகுறித்து வாயே திறக்காமல் இருந்து வந்த அவர் திடீரென அந்த அஸ்திரத்தை எடுத்து வீசியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ட்விட்டைப் போட்டுள்ளார். அதில், ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் நிலக்கரி ஊழல் குற்றவாளி சந்தோஷ் பொக்ராடியாவுக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்குமாறு என்னை தீவிரமாக வலியுறுத்தி வந்தார் என்று கூறியுள்ளார் சுஷ்மா.
அவர் யார், பெயர் என்ன என்று ஒருவர் சுஷ்மாவிடம் பதில் டிவிட்டில் கேட்க, அதற்கு நான் அவரது பெயரை நாடாளுமன்றத்தில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா. இதனால் பரபரப்பு கூடியுள்ளது.
சந்தோஷ் பொக்ராடியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2008 முதல் 2009 வரை நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர். மகாராஷ்டிராவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக நிலக்கரி ஒதுக்கீடு செய்த வழக்கில் இவரும் ஒரு குற்றவாளியாக உள்ளார். இவருக்கு நேற்றுதான் சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.
A senior Congress leader was pressing me hard to give diplomatic passport to the Coal Scam accused Santosh Bagrodia.@ANI_news
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 22, 2015 லலித் மோடிக்கு சலுகை காட்டியது தொடர்பாக சுஷ்மாவைக் குறி வைத்து வருகிறது காங்கிரஸ். இந்த நிலையில் காங்கிரஸுக்கு நெருக்கடி தர புதிய அஸ்திரத்தை பாஜக எடுத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் நாடாளுமன்றக் கூட்டில் அமளி துமளிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.
I will disclose name of the leader on the floor of the House.@imTejasBarot
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 22, 2015 சுஷ்மாவை மட்டுமல்லாமல் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறது காங்கிரஸ். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த விட மாட்டோம் என்றும் காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி விட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications